பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தெள்ளாற்று நந்தி நந்தி கற்று

(உறுதியுடன்) ஏன் முடியாது? செல்வியாகிய பரத்தை

கேட்கலாம்; ஊரிலுள்ள பிறர் கேட்கலாம். நான் மட்டும் கேட்கக் கூடாதா? அதுவும் என்னைப் புகழ்ந்து பாடும் தமிழ்ப் பாடலை நான் கேட்கக் கூடாதா? வேடிக்கைதான்! அதைக் கேட்கத்தான் வேண்டும். அரசே, இப்பாடல்களைக் கேட்பதானால், இங்கிருந்து சுடுகாடுவரை பச்சைக் கீற்றுக்களால் 99 பந்தல்கள் போடவேண்டும். ஒவ்வொரு பந்தலின் கீழும் நின்று ஒவ்வொரு பாடலைப் பாடுவோம். 100ஆவது பாடலை இடுகாட்டில் சிதையின்மேல் இருந்துகொண்டுதான் கேட்டல்வேண்டும். இன்னுமா பாடல்மேல் பற்று? அமை : ஈதென்ன புதுமை? இப்படி யாராவது பாடல்கள் கற்று நந்தி கேட்பதுண்டா?

அரசே! நான் வேண்டா என்றுதான் கூறுகிறேன். இப் பாடல்கள் ஒவ்வொன்றும் அறம் வைத்துப் பாடப் பெற்றுள்ளன. இப் பாடல்கள் யார்மேல் பாடப்பெற்றுள்ளனவோ அவர்கள் இப் பாடல் களைக் கேட்டால் இறக்க நேரிடும். அரசே! மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் தமிழ்ப் பற்றை அறிந்துகொண்டு அதன்மூலமே தங்களை

ஒழிக்க வழிதேடிவிட்டார் இளநந்தி. தயைகூர்ந்து இதனைக் கேட்கவேண்டா!

(சற்று ஆலோசித்து சரி: இளநந்திக்கு நாளை ஒர் ஒலை அனுப்பி அவனை வருமாறு செய்வோம். எவ்வாறாயினும் பாடலைக் கேட்டுத்தான் - வேண்டும்.