பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தெள்ளாற்று நந்தி அமை : (வருத்தத்துடன்) அரசே, இதனுடன் 98 பாடல்கள் முடிவடைந்துவிட்டன. 98 பந்தல்களும் தீப்பற்றி எரிந்துவிட்டன. தங்கள் உடலும் களைத்துக் கொண்டே வந்துவிட்டது. நிற்கவும் சக்தி இல்லை. இன்னுமா இக் கலைப் பைத்தியம்? உங்களை மிகவும் வேண்டிக்கொள்கிறேன். அரசே! புலவர் பெருந்தேவனாரின் சொற்களை நினைவு கூர வேண்டுகிறேன். அரசராகிய தாங்கள் தங்கள் இன்பத்தைமட்டும் கருதாமல் நாட்டு மக்களின் நலத்தைக் கருத வேண்டாவா? இப் பல்லவ சாம்ராஜ்யத்துக்காகவாவது தாங்கள் இதை நிறுத்தித் தான் ஆகவேண்டும். செல்வி : (அழுகை கலந்த குரலில்) அரசே அமிழ்தினும் பலர் இனிய என் தமிழ் மொழி கயவர்கள் கையில் அகப்பட்டால் கொல்லும் ஆயுதமாகவும் பயன்படும் என்பதைக் காண்கிறேன். பெருமானே! உங்களைப் போன்ற ஒரு பெருங்கலைஞரைத் தமிழ்ப் பாடல் கொன்றுவிட்டது என்ற பழிச் சொல்லை நம் தமிழ் மொழிக்கு வாங்கிவைப்பது முறையா? சிந்தித்துப் பாருங்கள். இதனுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். பல்லவநாட்டுப் பெருமக்களே! உங்கள் மன்னரை இவ்வாறு இறக்கவிடுவது முறையா? எங்கே சென்று விட்டீர்கள்? பல்லவ நாட்டுப் பெருமக்களே! ஏன் தயக்கம்? ஏன் அஞ்சி நடுங்கி நிற்கிறீர்கள்? கூடாது கூடாது, நிறுத்துங்கள், நிறுத்துங்கள் பாடலை, பல்லவச் சக்கரவர்த்தியைச் சாக விடமாட்டோம். தெள்ளாறெறிந்த நந்தி வர்மரை விடமாட்டோம். - சேவகன் 1 : உஸ்ஸ்ஸ். அதோ அரசர் பேசப்போகிறார். இரைச்சல் வேண்டா. அமைதி, அமைதி. நந்தி : அருமைச் செல்வி! எப்படியும் மேற்கொண்டு பாடலைக் கேட்டல் வேண்டும்.