பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளாற்று நந்தி 45 (பாடல் தொடர்கிறது) செல்வி : உங்கள் மன்னரை இப்படியே இழக்கப் போகிறீர்களா? ஆ. இனி என்ன செய்வேன்? நந்தி : (மூச்சுவாங்கும் குரலில் செல்வி; ஏன் தயக்கம். என்றோ ஒரு நாள் இறக்கத்தானே போகிறேன். இவ்வரிய பாடல்களைக் கேட்டுவிட்டு இறப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது. கற்றுச் சொல்லி! மேலே ւrr(Ջ ! (ஆகிரி) கொம்புயர் வாமை நாகம் எதிர்வந்த நந்தி குலவீரர் ஆகம் அழியத் தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலைமான வீர துவசன் செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாயச் செருவென்ற பாரி முடிமேல் வம்புயர் தொண்டை காணும் மடமாதர் தங்கை வளைகொண்ட தென்ன வலமே. (பாடல் முடிந்தவுடன் நெருப்புப் பற்றிப் பந்தல் எரிகிறது)

  • o 實

(புளியங்காட்டிலிருந்து காஞ்சி செல்லும் சாலை (புலவரும் இளநந்தியும்) - இளநந்தி : விரைந்து வாருங்கள் புலவரே! ஐயோ இதற்குள் என்ன நேர்ந்திருக்குமோ? புலவர் : இதோ நெருங்கிவிட்டோம். மன்னரைக் காப்பாற்றி விடுவோம். எப்படியும் நூறு பாட்டு முடிவதற்குள் தடுத்துவிடலாம். - -

  • o ·會·