பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தெள்ளாற்று நந்தி (காஞ்சியின் இடுகாடு) இளநந்தி, சிதையின்மேல் அமர்ந்திருக்கும் நந்திவர்மன்) துரத்தில், குதிரைக் குளம்பொலி மெள்ளக் கேட்டுச் சத்தம் மிகுதிப்படுகிறது. அந்த ஒலியின்மேல், "நிறுத்துங்கள், நிறுத்துங்கள், பாடலை நிறுத்துங்கள்” என்ற இளநந்தியின் அலறல் மேலோங்கிக் கேட்கிறது) இளநந்தி : (அலறல் ஐயோ அண்ணா.அண்ணா அப் நந்தி : பாழும் பாடல்களைக் கேட்க வேண்டா, நிறுத்திவிடுங்கள். தமிழின் பேரால், நம் இறந்த தந்தையின் பேரால் உங்களை வேண்டிக்கொள் கிறேன். பாவியாகிய என்னை மன்னித்து இதனை நிறுத்திவிடுங்கள். இளநந்தி! சிதையின்மேல் உட்கார்ந்து விட்டேன். இனி வாழவேண்டும் என்ற விருப்பமும் இல்லை எனக்கு உன்மேலும் வெறுப்பில்லை எனக்கு. இதோ இக் கணையாழியை நீயே எடுத்துக்கொள். இறுதிப் பாடலையும் என் மனங் குளிர, காது குளிரக் கேட்டுவிட்டு உயிர்விடுகிறேன். தம்பி இளநந்தி, சென்று வருகிறேன். கவலை வேண்டா என் போன்ற அரசர்களும், இப் பல்லவச் சாம்ராஜ்யம் போன்ற பேரரசுகளும் தோன்றும்; மறையும். இஃது இயற்கைதான். ஆனால், தமிழும், அதன் இலக்கியமும், கலையும் என்றும் வாழும். சென்று வருகிறேன். தமிழை மறவாதே! (வராளி) வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்துதுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்