பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சாப விமோசனம் இரா இதென்ன புதுமை! இப் புற்று ஆடுகிறதே. ஆ. இவர் யார்? தங்களைப் போன்று தவத்தால் முறுக்கேறின. உடலுடன் காணப்படுகிறார். முகத்தில் ஒளி நிறைந் துள்ளது. இதோ நம்மை நோக்கி வருகிறார். முனியுங்கவா! வணக்கம். - கோதமன் : தசரத குமாரா! மங்களம் உண்டாகட்டும். விசுவாமித்திர முனிவரே, கோதமன் வணங்கு கிறேன். - - விசுவா வணக்கம் அடிகளே! இராமா! இவரை நீ அறிந்து கொள்ளவேண்டும், . இரா : அறியத் துடித்துக்கொண்டிருக்கிறேன் ஸ்வாமி. விசுவா . இவர் கோதம முனிவர். அதோ சிலையிலிருந்து பெண்ணாக மாறி அப்பால் நிற்கும் அகலியைதான் இவருடைய மனைவி. - இரா வணக்கம் தாயே! என்னை வாழ்த்தி அருள வேண்டுகிறேன். - அகலியை (பெரிய விம்மலுக்கிடையில் மெல்லிய குரலில்) மங்களம் உண்டாகட்டும். இரா தாயே! நீங்கள் வருந்தவேண்டிய காரணம் யாது? தங்கள் துயரம் எதுவாயினும் அதனைப் போக்க இச் சிறுவனுக்கு ஆற்றல் உண்டு. அக ஆம். இராமன்தான் நீ. தசரத குமாரன் தான் நீ சாப விமோசனம். சாபவிமோசனம். சாப. விமோசனம் கடவுளே, மாசுபட்ட என் தசைக் கூட்டம் பவித்திரம் அடைந்துவிட்டது. - - இரா : தாயே. நீங்கள் யார்? என்ன சாப விமோசனம் நடந்துவிட்டது? விசுவாமித்திர முனிவரே! கல்லாகக் கிடந்த இவர் எவ்வாறு இப் பெண் வடிவம் பெற்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லையே.