பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப வி1ே9ாசனம் 51 விக ; குழந்தாய்! அஃது ஒரு பெரிய கதை. பலகாலம் முன்பு நடந்தது. இந்த ரிஷிபத்தினியின் அழகில் தேவேந்திரன் மயங்கிவிட்டான். இவளை எவ்வாறாயினும் அடைய வேண்டும் என முடிவு செய்து கொண்டான். அதற்காக ஒரு தந்திரமும் செய்தான். ஒருநாள் விடியற்கால நேரம். இந்திரன் கோழி வடிவில் கோதம முனிவன் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து. 雯 黃 * (இடம்: கோதம முனிவன் குடில்) (கோதமன், அகலியை, இந்திரன்) (கோழி கூவுகிறது) கோத அகல்யா! அகல்யா!! உஷத் காலம் ஆகிவிட்டது. இன்னுமா உறக்கம். விழித்துக்கொள். யான் கங்கைக்கு நீராடப் போகிறேன். அக ஆ நாதா! நீங்களா என்னை எழுப்பினர்கள்: இன்னும் பொழுது விடியவில்லைபோல் இருக்கிறது. கோத அடி பேதை: கோழி கூவிவிட்டது. உஷத் காலம் தொடங்கிவிட்டது. யான் ஆற்றுக்குச் செல்கிறேன். பூசைக்கு வேண்டியவற்றை ஏற்பாடு செய்துவை. (முனிவன் பாடிக் கொண்டு போகிறான். உபநிஷத் பாடல் எழுந்து தூரத்தில் மறைகிறது) (இந்திரன் கோதமன் வேடத்தில் வந்து அகலியையை நெருங்குகிறான்) - அக : நாதா நதிக்குச் சென்றீர்களே! ஏன் அதற்குள் திரும்பிவிட்டீர்கள்? இன்னும் பொழுது சரியாக விடியவில்லையா? - . . . . .