பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ம் சாப விமோசனம் இந்தி அக : இந்தி கோத ஆம் அகல்யை! என் மனம் ஒருநிலையில் நிற்கவில்லை. பலகாலமாக அலைமோதிக்கொண் டிருந்த என் மனத்துக்கு ஒரு ஆறுதல் தரவே உன்னை நாடி வந்தேன். என்ன? நாதா! பலகாலமாக என்று கூறுகிறீர்களே! திடீரென்று உங்கள் பேச்சில் ஏதோ மாறுதல் தெரிகின்றதே.

(அசட்டுச் சிரிப்புடன்) நான் தவறாக ஒன்றும் கூறவில்லை. உன் தொடர்பு வேண்டும் என்று என் மனம் வருந்திய வருத்தத்தை எடுத்துக் கூறினேன். இன்னும் உஷத் காலம் வரவில்லை. எனக்கு அமைதி வேண்டும்.

竇 • 鸞 (கங்கைக் கரை) (கோதமன்) ஈதென்ன புதுமை. உஷத் காலம் இன்னும் வரவில்லையே! கோழி எவ்வாறு கூவிற்று? அன்னை கங்கை உஷத் காலத்துக்குரிய ஒலியுடன் இன்னும் ஒடத் தொடங்கவில்லையே. ஒருநாளும் இல்லாத புதுமையாகக் கோழி கூவியதும், யான் விழித்ததும் ஏன்? என் மனமும் ஏதோ தீமையை எதிர்பார்ப்பது போல் நடுங்கக் காரணம்? ஒருவேளை அகல்யைக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டிருக்கலாமோ? அவளை எழுப்பி நான் சொல்லிக்கொண்டு புறப்படும் பொழுது நன்றாகத்தானே இருந்தாள். ஆ1.ஏன் இவ்வாறு என் நெஞ்சம் அலை மோதுகிறது?. ஒஹோ அப்படியா செய்தி: ஈதென்ன கொடுமை? விரைவில் ஆசிரமம் திரும்பிச் சென்றால் உண்மையை அறியலாம். - -