பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் ( 53 இடம்: கோதமமுனிவன் குடில்.) (கோதமன், இந்திரன், அகலியை) (கோதமன் வேகமாகத் திரும்பி ஆஸ்ரமம் வருகிறான்) (கோதமன் ஆஸ்ரமத்தில் நுழையும்பொழுது இந்திரன் பூனை வேடத்தில் மெல்ல வெளியேறுகிறான்-பூனை கத்தும் ஒலி) கோத : இந்திரா! இந்திரா!! நில் ஓடாதே. பூனை வடிவம் எடுத்துக்கொண்டால், நான் உன்னைத் தெரிந்து கொள்ள முடியாது என்றா நினைத்துக்கொண்டாய்? து ! நீயும் ஒரு தேவனா? உன்னைப் போன்ற காமப் பித்து ஏறியவனை, மிருகத்திலும் கேடு கெட்ட வனைக் கண்ணால் பார்ப்பதும் கொடியபாவம். ஆயிரம் யர்கங்கள் செய்து எத்துணைக் காலம் சேர்த்த புண்ணியத்தை ஒரு விநாடியில் அழித்துக் கொண்டாயே! உன்னைக் கண்டு கோபிப்பதா? அல்லாமல் வருந்துவதா? இதோ என்னுடைய சாபம். பிறர் உன்னைக் காணும் பொழுதெல்லாம் உன் தவறை அறிய அதுதான் தக்கவழி ஒழிந்துபோ. இந்திரன் தேவலோகத்தை அடைகிறான்) கோத : அகல்யா! அகல்யா!! என்ன அப்படி நிற்கிறாய்? உன் இன்பத்துக்கு இடையூறாக நான் வந்துவிட்டேன் என்று நினைக்கிறாயா? துரோகி! ஏன் தலைகுனிந்து கொண்டு நிற்கிறாய்? வெட்கம் வந்துவிட்டதா? அக : (தழுதழுத்த குரலில்) நாதா! என்னை மன்னித்து. கோத : சீ! கொடியவளே! நாதா என்று இனியும் என்னை அழைக்க உனக்கு நெஞ்சில் எவ்வளவு அழுத்தம் இருக்கவேண்டும்? உன் செயலின் பாதகத்தை நீ அறிவாயா? இதற்கு எங்காவது மன்னிப்பு உண்டா?