பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ம் சாப விமோசனம் அக : முனிபுங்கவா! என் நிலையைக் கேட்காமலே தாங்கள் கோபிப்பது, தங்கள் பண்பாட்டிற்கு ஏற்றதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கோத என் பண்பாட்டிற்கு உன்னுடன் பேசுவதும் தவறுதான். அக வந்தவன் தங்கள் வேடத்தில் வந்தான். யான் உறக்க மயக்கத்தில் இருந்தேன். என் உள்ளத்தில் எவ்வித மாசும் இல்லை என்பதை எவ்வாறு உங்கட்கு நிரூபித்துக் காட்ட முடியும்? கடவுளே! நீயும் என்னை இவ்வாறு கைவிட்டு விட்டால். கோத : கொடியவ்ளே! நிறுத்து உன் வஞ்சகப் பேச்சுகளை, இன்னும் பேசி என். மனத்தை நீ மாற்ற முயல்வதற்குள் உன்னைச் சபித்துவிட வேண்டும். அக : (அழும் குரல் ஐயனே! யான் செய்த பிழைக்கு - எத்தகைய தண்டனை கொடுத்தாலும் பெறச் சித்தமாக இருக்கிறேன். என் பாபத்தை நினைத்து அணு அணுவாக இற்றுக்கொண்டிருக்கும் என்னை, மேலும் மேலும் உங்கள் சொல் அம்புகளாலும் வதைக்க வேண்டா. கோத : மேலும் பேசாதே. நீ கல்லாக. அக : நான் கல்லாகவே மாறிவிடுகிறேன். மனித உடம்புடன் இருந்தால் என் வேதனை என்னை அரித்துத் தின்றுகொண்டே இருக்கும். r . (தனக்குள்) என்றுதான் என் சாபம் விடியுமோ? 壶 囊 彙 (மீட்டும் பழைய காட்சி: இராமன் விகவாமித்திரன் முதலியோர்) х