பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சாப விமோசனம் இராம : பெரிதும் நன்றியுடையேன் ஐயனே! விசு : நாங்கள் நெடுந்துாரம் செல்லவேண்டும். எங்கட்கு விடை கொடுக்க வேண்டுகிறோம். கோத : மங்களம் உண்டாகட்டும். (இராமன் முதலியோர் செல்லல்; சில வினாடிகள் கழித்து) கோத : (சந்தேகம் கலந்த குரலில் மெதுவாக அகல்யே! என்ன வேண்டும்? அக (சற்றுத் தாமதித்து பசிக்கிறது. கோத : வயிற்றுப் பசிதானே? + . அக: நான் கல்லாவே இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். - கோத . ஏன் அவ்வளவு வெறுப்பு: அக வாழ்வில் அமைதி இல்லாதபொழுது, அது கிட்டாத பொழுது, வேறு என்ன செய்வது? மனம் கடலாகக் கொந்தளித்தால் வேறு என்ன செய்வது? கோத : ம். அக : என்ன யோசிக்கிறீர்கள்? - கோத கொந்தளிப்பில் இன்பம் இருக்கிறதே தவிர, மனத்தைச் சாகடித்துவிட்டால் அதற்குப் பெயர் அமைதி இல்லை. - அக : அப்படியானால் தங்களுடைய மனம் ஏன் இப்படிச் சலிக்கிறது. தசரதகுமாரன் கூறும் பொழுது காணப்பட்ட அமைதி அவனுடனேயே சென்று விட்டதா? . . . . . . . - கோத சற்றுப் பொறு! நான் சென்று பழவகைகளைக் கொண்டு வருகிறேன். இருவரும் உண்டு பசியாறலாம். r . . . . 囊 索 嚇