பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் 57 (விடியற்காலை) (அகலியை, கோதமன்) அக : ஏன் ? காலைக்கடன்களை முடிக்கச் செல்ல வில்லையா? ஏதோ பறிகொடுத்தவர் போல் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள்? கோத இதோ செல்கிறேன். விரைவில் நீராடிக் கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வருகிறேன். (கோதமன் போகிறான்) அக : (தனக்குள்) என்ன வாழ்வு? மறுமலர்ச்சியா இது? தானாகப் பழுக்காத பழத்தைத் தடிகொண்டு அடித்துப் பழுக்கவைத்தால் என்ன சுவை ஏற்படும் அதில், இராமன் என்ற வண்டு வந்து மோதித்தானே எங்கள் வாழ்வை மலரச் செய்தது. அதனால்தான் அதில் மணம் ஏற்பட வில்லையோ? ஆம் ! இரண்டாம் முறை வாழ்வு மலர்ந்தால், அதில் மணத்துக்கு இடம் ஏது? விரைவில் கர்மானுஷ் டானங்களை முடித்துக் கொண்டு வருகிறாரோ? மீண்டும் பழைய பயமா? என்னுடைய அன்பின் ஆழத்தை அறிவாரா அவர். கோத : (தனக்குள்) ஆம்! அகலியை தூய்மையானவள்தான். நெஞ்சினால் தவறு செய்யாதவள். அவள் என்ன செய்வாள் பாவம்... தவறு முழுவதும்... அவனுடையது. நான்தான் பாவம் அவளிடம் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டேன். என்பால் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள்? இவ்வளவு தூய அன்புக்கு நான் தகுந்த பாத்திரந்தானா? (கோதமன் வருகை) - அக : (கரகரப்பான குரலில்-நிதானமாக நாதா! தங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். கேட்கலாமா?