பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் , 59 கோத : (வருத்தக் குரலில்) பல யுகங்கள் கல்லாகக் கிடக்கவேண்டிய அவ்வளவு பெரிய தவற்றை நீ செய்தாயா? என் மனம் பெரிதும் குழம்பிக் கிடக்கிறது. பாபம் என்பது, மனம் அறிந்து செய்யும் ச்ெயலுக்குத்தான் உண்டே தவிர, மனம் அறியாமல் செய்யப்படுவது பாபம் அன்று. அக அப்படியானால். கோத ஆம்! பிரியே! தாய் மயக்கம் உற்ற நிலையில் சிசுவின்மேல் விழுந்து அதனால் குழந்தை இறந்து விட்டால், தாய் கொலைக்குற்றம் செய்தவளா? இல்லையே! அக : கொலை செய்த பாபம் அவளைச் சேராமல் இருக்கலாம். ஆனாலும் அவள் கொல்லுதலைச் செய்தவள் தானே. அவளுடைய துயரத்தைத் தணிக்க முடியுமா? கோத இதுவரை நான் செய்த முடிவுகள் அனைத்தும் சூறைபோய்விட்டன. இராமனுடைய பட்டாபி ஷேகமே தடைப்பட்டுவிட்டது என்றால் என்ன கருத்து? மனிதனுடைய அளவைகளுள் அடங்காத ஒரு சக்தி, குருட்டுத்தனமாக ஏதோ செய்துகொண்டு போகிறது. மறுபடியும் நான் அமைதியை நாடிச் செல்லப்போகிறேன். அக : நீங்கள் மட்டும் தனியே சென்றுதான் அமைதியை நாடப்போகிறீர்களா? நானும் உங்களுடன் வரலாமென்று நினைக்கிறேன். எங்கே செல்லலாம்? இராமனும் சீதையும் சென்றுவிட்ட பிறகு அயோத்தியின் அருகில் இருக்கவேண்டும் என்ற ஆவலும் தணிந்துவிட்டது. கோத சரி, மிதிலைக்குச் செல்லலாமா? நம் மகன் சதானந்தனைக் கண்டு பல காலம் ஆகிவிட்டதே.