பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சாப விமோசனம் மிதிலைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவனையும் பார்த்துவிட்டு வரலாமென்று நினைக்கிறேன். அக சரி. அப்படியானால் இப்பொழுதே புறப் - பட்டுவிடலாம். - இருவரும் வழிநடை செல்கிறார்கள்) 竇 囊 簧 (இடம்: மிதிலைக்குச் செல்லும் வழி) (கோதமன், அகலியை) கோத : (தனக்குள்) அமைதி. அமைதி! எங்கே கிடைக்கிறது அந்தப் பொருள்? காலாதீதப் பழம் பொருளின் கையிலகப்பட்ட சிறு பூச்சிகள் தாமா நாமெல்லாம்? பாவம் அகலியை... தான் பெற்ற மகனைக் காணக்கூடக் கூச்சப்படுகிறாள். நானே அவள் குற்றத்தை மன்னித்துவிட்டபொழுதுகூட அவள் ஏன் இன்னும். உடன் வரக்கூடப் பிடிக்காமல் பின் தங்கியே நடக்கிறாள். . அக : (தனக்குள் அவர் என்னை உள்ளபடியே மன்னித்து விட்டாரா? மன்னித்திருந்தால் ஏன் இவ்வளவு அமைதியற்றிருக்கிறார்? நான் பெற்ற மகனைக் காணக்கூட எனக்கு வெட்கமாக இருக்கிறது. பாவம் அவர் தம்மகனைக் காணுவதற்கு முன், அமைதியை நாட முற்படுகிறார். வாழ்க்கை யாரும் விடை காண முடியாத புதிராக இருக்கிறதே. கல்லாகக் கிடந்த பொழுது, எப்பொழுது மனித வடிவம் பெறலாம் என்ற ஆசை. மானிட வடிவம் பெற்றவுடன் மீண்டும். கோத (உரக்க அகல்யா. அகல்யா. வா! என்னுடன் நடந்துவா. அக : இதோ வந்துவிடுகிறேன் (நாணத்துடன்) ஏன் அருகில் அழைத்தீர்கள்? -