பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் , 61 கோத பிரியே. என் கையைப் பிடித்துக்கொண்டு நட. சிறிதும் அஞ்சவேண்டா. அக : (நாணத்துடன்) நீங்கள் இருக்கும்பொழுது அச்சம். o: 素 * இடம்: கங்கைக்கரை) (கோதமன், அகலியை, சதானந்தன்) |தூரத்தில் தண்ணின் சலசலப்பும் காயத்திரி மந்திரம் ஒதும் ஒலியும் சிறிது மென்மையாகக் கேட்கிறது) கோத அதோ சதானந்தன். கங்கையில் நின்று ஜபம் செய்கிறான். (தூரத்தில் இருந்து சதானந்தா சதானந்தா. சதா : அப்பா. அம்மா. வாருங்கள், வாருங்கள். வணக்கம். கோத : மங்களம் உண்டாகட்டும் மகனே! சதா : அம்மா வணங்குகிறேன். அக : (தழுதழுத்த குரலில் தனக்குள்) எவ்வளவு பெரியவனாகிவிட்டான் நம் மடியில் கிடந்து வளர்ந்த இவன்! (உரக்க மங்களம் உண்டாகட்டும் குழந்தாய். - சத்ா : அம்மா, அப்பா ! இருவரும் வாருங்கள் ஆஸ்ரமத்திற்கு. "År 嶽 * (இடம்: மிதிலா நகரம்) (கோதமன், சதானந்தன்) கோத : குழந்தாய். ஈதென்ன ஜனகன் ஆட்சி செய்கின்ற மிதிலையில்கூட எல்லாம் பொலிவிழந்து காணப்படு கின்றனவே! திருமஞ்சனம் கொண்டு வரும் யானை,