பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ம் சாப விமோசனம் காட்டில் பாரமிழுக்கும் யானையைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு வருகிறதே... உடன் வரும் அர்ச்சகனும் பொலிவிழந்து காணப்படுகிறான். சதா தந்தையே! இராமன் காடு சென்ற செய்தி மிதிலையை எட்டியதிலிருந்து மிதிலா நகரம் இப் படித்தான் இருக்கிறது. கோத : கர்ம யோகியாகிய ஜனகன் ஆட்சியிலும் நிலை இதுதானா? இராஜ ரிஷி என்று அவனை அழைப் பது வெறும் உபசார வழக்குத்தானா? சதா : நாம் இப்பொழுது ஜனகனுடைய ஆத்ம விசாரணை மண்டபத்திற்குத்தானே செல்கிறோம். அங்கே உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைத்து விடும். - 演 窦 蜜 - (ஜனகன் ஆத்ம விசாரணை மண்டபம்) (கோதமன், ஜனகன்) கோத : (தனக்குள்) ஆத்ம விசாரணை மண்டபமா இது. இந்தப் பெரிய கூட்டம் ஏதோ பெரிய சந்தையில் வியாபாரம் செய்ய வந்த கூட்டம் போல் அல்லவா இருக்கிறது. இதில் எவ்வாறு ஒன்றைப்பற்றிச் சிந்திப்பது? ஜன : முனியுங்கவா. நீங்கள் நினைப்பது தவறு. ஆத்ம விசாரணை செய்வது, தனிமையில்தான் முடியும் என்று ஏன் கருதுகிறீர்கள்? கோத : (திடுக்கிட்டு நான் நினைத்ததை அப்படியே கூறிவிட்டீர் ஜனகரே. நான் நினைத்ததற்கு விடை கூறவில்லையே? - . ஜன : கோதம முனிவ! கோசலம் என்னும் கனவு நாட்டை அரிதாக முயன்று படைத்த வசிட்ட முனிவன்