பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் 63 உணர்ச்சிக்கு மதகு அமைக்காமல் போனது வருந்தற்குரியது. - கோத : என்ன கூறுகிறீர் ஜனகரே. உணர்ச்சியின் முடிவிலேதான் உண்மை பிறக்கும் என்பதை உமக்கு நான் கூறவேண்டுமா? ஜன : உணர்ச்சியின் முடிவிலே உண்ம்ைமட்டுமா பிறக்கும்? அதனை அடக்கி ஆளத் தெரியவில்லையானால் துன்பமும் பிறக்கும். பெரிய சக்கரவர்த்தியாகிய தசரதன் கடமையை மறந்து பிள்ளைப் பாசத்தினால் உயிரை விட்டதும், பரதன் முடிசூடாமல் ஆட்சி செய்வதும் எல்லாம் உணர்ச்சிக்கு மதகு வைக்காததனால் ஏற்பட்ட விளைவுகள்தாமே! கோத : தாங்கள் அரசியலை எவ்வாறு நடத்துகிறீர்கள்? ஜன : நான் அரசியலை நடத்துகிறேனா? கோத அரசியல் உங்களை நடத்துகிறதா? ஜன : இரண்டும் தவறு. அரசியல் தானாக நடை பெறுகிறது. சாட்சி மாத்திரையாய் இருந்து நான் அதைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். சரி தங்கள் தர்ம விசாரணை நன்கு நடைபெறுகிறதா? கோத : இல்லை. ஜனகரே. உண்மை என்பது கானல் நீர் போல, தேடிச் செல்லச் செல்ல அப்பால் சென்று கொண்டே இருக்கிறது. புதிய புதிய பிரச்சினைகள் நாள்தோறும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. சரி நான் வருகிறேன். - ஜன (புன்சிரிப்புடன்) பாவம் கற்பகோடிக் காலம் தவம் புரிந்தும் கோதம முனிவருக்கு 6 (65 /ہیےlن அடங்கவில்லை. 喻 輪 *