பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சாப விமோசனம் (விடியற்காலை) (கோதமன், அகலியை) கோத பிரியே. அகல்யா! அதற்குள் நீராடி வந்து விட்டாயா? கங்கையில் நீண்ட நேரம் விளையாட விரும்புவாயே. அக : இல்லை பிரபோ! கோத . ஏன்? உன் முகமும் வாடி இருக்கிறதே. அக : (அழுகையுடன்) சுவாமி சாப விமோசனம் கிடைத்ததே தவிர, பாப விமோசனம் கிடைக்க வில்லையே எனக்கு. கோத : என்ன நடந்துவிட்டது? அக : துயரக் குரலில்) ரிஷிபத்தினிகள் கங்கையில் நீராடி விட்டு வரும்பொழுது என்னைக் கண்டால் அருவருப்புடன் எட்டி ஒடுகிறார்கள். நீண்ட துரத்தில் இருந்து அதோ அகல்யை என்று வெறுப்புடன் சுட்டிக் காட்டுகிறார்கள். கோத இதற்கா இவ்வளவு வருந்துகிறாய்? நீயாவது உள்ளத்தளவில் தூய்மை உடையவளாக இருக்கிறாய். உள்ளத்தால் தீமை செய்பவர்கள் அகப்பட்டுக் கொள்வதாக இருந்தால், உலகில் ஏறத்தாழ அனைவருமே அகப்பட்டுக்கொள்வார்கள். அக நாம் இந்த மனித சஞ்சாரமுள்ள இடத்தை விட்டுத் தீர்த்தயாத்திரை சென்றால் என்ன? கோத : இதோ இப்பொழுதே புறப்படலாம். எங்கே என் தண்டு கமண்டலம்? . . . . . சதா : அம்மா, அப்பா... அதற்குள்ளாகவேயா புறப்பட வேண்டும்? . . - * - -