பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் ( 65 கோத : எப்பொழுதானால் என்ன மகனே? சென்று வருகிறோம். 彎 籌 醬 வலுவற்றவனின் புத்திக்கு எட்டாது நிமிர்ந்து நிற்கும் சங்கரனுடைய கோயில்போல திடமற்றவர்கள் கால்களுக்குள் அடைபடாத கைலையங்கிரியின் பணிச் சிகரங்களை அவர்கள் கண்டு வணங்கினார்கள். தமது துன்பச் சுமையான நம்பிக்கை வறட்சியை உருவகப்படுத்தின பாலையைக் கடந்தார்கள். தம் உள்ளம்போலக் கொழுந்துவிட்டுப் புகை மண்டிச் சாம்பலையும், புழுதியையும் கக்கும் எரிமலைகளை வலம் வந்து கடந்தார்கள். (கடைசியில் சரயு நதிக்கரை வந்தடைந்தார்கள்) கோத பிரியே! இதோ பதினான்கு ஆண்டுகட்கு முன்னர் நாம் கட்டி வாழ்ந்த. குடிசை இருந்த இடம். அக : சுவாமி. என் மனம் இடிந்து கிடப்பது போலவே இக் குடிசையும் இடிந்து கிடப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. r கோத அஞ்சாதே. இரண்டையும் தழைக்கச் செய்ய நான் இருக்கிறேன். அக : யான் சரயு நதிக்குச் சென்று நீராடிவிட்டு வருகிறேன். 費 蜜 霸 (சாயு நதிக்கரை) (கைகேயி, அகலியை) கைகேயி : யாரது? அகல்யாதேவியா? இதோ கைகேயி சாஷ்டாங்கமாக வணங்குகிறேன் தாயே.