பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சாப விமோசனம் அக : சக்கரவர்த்தினி. இஃதென்ன கூத்து. பரிசனங்கள் கூட இல்லாமல் இப்படி வரலாமா? தங்கள் விதவைக் கோலம் என் மனத்தைத் துளைக்கிறது. கைகேயி ; (சாந்தமான குரலில்) அறத்தின்மேல் கொண்ட அதிகப் பற்றின் காரணமாகப் பரதன் தன் மனத்தில் எனக்கு இடம் கொடுக்க மறுத்து விட்டான்; என்னை மறந்துவிட்டான். அக : (புன்சிரிப்புடன்) பரதனுடைய தர்ம வைராக்கியத் திற்கு யார் காரணம்? கைகேயி : குழந்தை வைத்த நெருப்பினால் ஊர் வெந்து போயிற்று என்றால், அதற்காகக் குழந்தையைக் கொன்றுவிடுவதா? அக : குழந்தையைக் கொல்வது முறையன்று ஆனாலும் எரிந்தது எரிந்ததுதானே. . கைகேயி : எரிந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் என்ன லாபம்? - அக சாம்பலை அகற்றுகின்றவன் இன்னும் ஒரு நாளில் வந்து விடுவானே. கைகேயி : (வருத்தக் குரலில் ஆமாம். அப்படித் தான் இதுவரையில் கருதி இருந்தேன். ஆனால், நாலா திசைகளிலும் சென்ற ஒற்றர்கள் இராமனைக் காணாது திரும்பிவிட்டனர். பரதன் நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறான். அவன் போவதற்கு முன்னர் யானும் தனிப்பட்ட முறையில். - . அக : தேவி..இஃதென்ன கொடுமை: வசிட்டரைக் கொண்டாவது பரதனுக்கு எடுத்துக் கூற முடியாதா?