பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப விமோசனம் 69 கோத அந்த உருவம் பேசும் பொழுது காலும் உள்ளமும் சுடுகின்றனவே. (சாதாரணக்குரலில்) நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம். (இராமனும் சீதையும் தேரில் சென்ற பிறகு) (தனக்குள்) என்ன செய்தாலும் அகல்யையின் மனப்பாரம் குறையாது போல் இருக்கிறதே. இதற்கு என்ன செய்யலாம்?. ஆம். அவளுடைய மனத்தை மாற்ற ஒரேயொரு வழிதான் உண்டு. சதானந் தனுக்குப் பிறகு நீண்ட காலமாக அவள் தாய்மையை அடையவில்லை. இப்பொழுது ஒர் இளம் குழந்தை அவளுக்கு இருந்தால் அவள் மனம் மாறினாலும் மாறலாம். அகல்யா. அகல்யா...

(மயக்க நிலையில் யாரது? என்னை அழைப்பது?

இந்திரா. இன்னுமா நீ என்னை விடவில்லை, வேண்டா; உள்ளத்தின் துாய்மையை உலகம் அறியும் நாள் இன்னும் வரவில்லை. அந்த நாள்வரை, யான் மறுபடியும் கல்லாகவே இருக்க விரும்புகிறேன். கோத அகல்யா. அகல்யா. என்ன பேசுகிறாய் பிரியே. எங்கே இந்திரன்? ஏன் இந்த மயக்கம்? இதோ கோதமனாகிய நான் நிற்கிறேன். அக : யார்? யார்? கோத. கோத ஆ அகல்யா. மீண்டும் கல்லாகிவிட்டாயா! நீயாகப் பெற்ற இந்த நிலையை யார் மாற்ற முடியும்? (கயிலையங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப் பாலைவனத்தின் வழியாக விரைந்து கொண்டிருக்கிறது. அதன் குதிகாலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது) அவன்தான் கோதமன் அவன் துறவியானான்.