பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் (வரலாற்றுச் சித்திரம்) (காஞ்சியிலுள்ளதும் இராஜசிம்மப் பல்லவன் கட்டியதுமான புகழ்பெற்ற கயிலாசநாதர் கோயில்பற்றிய வரலாற்றை வரலாறு, கல்வெட்டு என்பவற்றின் துணை கொண்டு ஒலி நாடக முறையில் கூறுவது)

கல்வியிற் கரையிலாத காஞ்சி

குரல் 1 குரல் 2 : மாறிலாது இருந்திடு வயங்கொள் காஞ்சி குரல் 3 : அகன் அமர் காஞ்சி குரல் 4 : கற்றவர் மலி காஞ்சி குரல் 1 : ಹ4ಣಹಹಸ சூழ் திருக்காஞ்சி குரல் 2 : விழவு அறாக் காஞ்சி குரல் 3 : நேரிழை அறம்புரிந்திடு காஞ்சி குரல் 4 : பீடுதங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும் காஞ்சி . குரல் 1 : தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் துய மாந்தர்வாழ் திருக்காஞ்சி. . குரல் 2 : அம்மை காம கோட்டத்து முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் காஞ்சி.