பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 71 அறிவிப்பாளர்: தேரொலிக்க, மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ் படைத்த காஞ்சி மாநகரம் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே பெரும் புகழ் படைத்தது. நகரேவு காஞ்சி' என்று பிறமொழியிலும் சிறப்புறப் பாராட்டப் பெற்றது. பல்லவர் காலந் தொடங்கி அதன் சிறப்பு மேலும் வளர்ந்தது. நாலந்தாப் பல்கலைக் கழகம் போன்ற பெரியதொரு கடிகையைத் தன்பால் பெற்று விளங்கியது. சைவம், வைணவம், ஜைனம், பெளத்தம், ஆசீவகம் ஆகிய எல்லாச் சமயங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி வளரத் தன்பால் இடந் தந்து பொலிந்தது காஞ்சி மாநகரம். இத்தகைய காஞ்சியில் கி.பி. 680 முதல் 720 வரை இராஜசிம்மன் என்ற பல்லவன் செங்கோல் செலுத்து கிறான். அவனுடைய கொலுமண்டபத்தில் சிறந்த சிற்பிகளும் அமைச்சர்களும், கடிகையில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர் சிலரும் அமர்ந்துள்ளனர். (கொலுமண்டபம்-பெரிய இரைச்சல், வாத்திய முழக்கம் - திடீரென்று இரைச்சல் குறைதல்) அத்யந்த காமன் வாழ்க!

அபராஜிதன் வெல்க!
அமித்திரமல்லன் வெல்க!
காஞ்சி மகாமணி வாழ்க!
ரணவீரன் வெல்க!
ரணதீரன் வெல்க!
ரணசண்டன் வெல்க!
ரணவிக்ரமன் வாழ்க!
அகண்டசாசனன் வாழ்க!
லோக சிகாமணி வாழ்க!

தெ.ந.-6