பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டி கயிலாசநாதர் கோயில் கு 3 . அவனிபஜானன் வாழ்க! கு 4 : சிவ சூடாமணி வாழ்க! இராஜசிம் : அமைச்சர்களே!. சிற்பிகளே. அனைவர்க்கும் என்னுடைய வணக்கம். பல்லவப் பேரரசில் நீங்கள் அனைவரும் எவ்விதக் குறையுமின்றி இருப்பீர்கள் என நினைக்கிறேன். - கடிகை ஆசிரியர் : அபராஜித!... உனக்கு வெற்றி உண்டாகட்டும். உனது முன்னோனான ஸ்கந்த சிஷ்யன் இக் காஞ்சீபுரத்தை வெல்லும்பொழுது இங்கே நிலைபெற்றிருந்த கடிகையையும் சத்யஸேனன் என்பவனிடமிருந்து வென்றான். இராஜ சத்யபுத்ர வம்ஸத்தவனான சத்யஸேனன் இந்தக் கடிகையைப் போற்றி வந்ததும் அதை எம் முன்னோனான ஸ்கந்தசிஷ்யன் கைப்பற்றினதும் யாம் அறிந்தவையே. அதற்கு இப்பொழுது என்ன குறைவந்துவிட்டது? கடிகை ஆசிரியர் : சக்கரவர்த்தி... அந்தக் கடிகை இப்பொழுது ஓரளவு கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அதை நீ நல்நிலைக்குக் கொண்டுவந்து பழைய புகழ் மங்காதிருக்கும்படிச் செய்யவேண்டும். அமை : மகாமல்ல. ஒரு விண்ணப்பம் இராஜ : அமைச்சரே. தாராளமாகக் கூறுங்கள். அமை : கடிகையை நல்ல நிலையில் நிறுவவேண்டியது மிகவும் முக்கியந்தான். ஆனால், கடவுள் பக்தியுடன் கலந்து நில்லாத கல்வி பயனற்றது. ஆகவே, பெரிய கல்விச் சாலையாக உள்ள இந்தக் கடிகையின் பக்கத்தில் ஒரு பெரிய கோயில் அமைக்க வேண்டும் என்று கருதுகிறேன். - -