பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 73 இராஜ : அமைச்சர் கூறுவது முற்றிலும் சரியே. நானும் சிற் அவ்வாறே நினைக்கின்றேன். சிற்பாசாரியார் இதுபற்றி என்ன கூறுகிறார்?

அரசே. ஸ்கந்தசிஷ்யன் ஜயித்த கடிகையை உங்கள்

முன்னோர் போற்றிப் பாதுகாத்தது உண்மைதான். ஆனால், அதற்குமேல் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அமைச்சர் கூறினது போல் கடவுள் பக்தியோடு சம்பந்தப்படாத கல்வி விழலுக்கிறைத்த நீராகவே ஆகிவிடும். ஆகவே, தாங்கள் கருதுவதுபோல் ஒரு கோயிலையும் நிறுவுவது முற்றிலும் பொருத்தமானதே. அமை : அரசே. மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலைத் தாங்கள் கட்டியது பிற நாடுகளிலிருந்து வருபவர் கட்குப் பல்லவர்களின் சிற்பச் சிறப்பை எடுத்துக் காட்டப் போதுமானதாக உள்ளது. ஆனால், தலைநகராகிய காஞ்சியில் அத்தகைய ஒரு கோயில் இருக்கவேண்டியதன் அவசியத்தை நான் எடுத்துக் கூறவேண்டிய தேவையே இல்லை ÉST 6ðf நினைக்கின்றேன். இராஜ : மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலைவிடப் பெரியதாகவும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தாகவும் தலைநகரக் கோயில் அமையவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். - சிற் ஆம். என்னுடைய எண்ணமும் அதுவே. மாமல்லன் முதலானவர்கள் பாறைகளைக் குடைந்து செய்த குடைவரைக் கோயில்களில் ஒரு தொல்லை உண்டு. சிற்பிகளின் விருப்பம்போல் செதுக்குவதற்கு அந்தக் கற்கள் இடந்தரவில்லை. இராஜ : சிற்பாசாரியாரே. அப்படி இருந்தும் அவர்கள் இன்றும் உலகம் கண்டு வியக்கும் படியான