பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 75 சிற் ஆம். தங்கள் காலத்தில் கட்டப்பெற்ற எல்லாத் துரண்களும் பின் கால்களில் எழுந்து நிற்கும் சிங்கங்கள் தாங்கும் தூண்களாகவே இருக்குமாறு அமைத்துள்ளேன். இராஜ : கோவில் எந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளது? சிற் : நீண்ட சதுர வடிவில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் அமைக்கப்பெற்றுள்ளது. வாயிலில் எட்டுச் சிறிய கோயில்களை அமைத்துள்ளேன். இராஜ : ஏன்? சிற் : பட்டத்தரசி ரங்கபதாகையும் இளைய மகாராணியும், தங்கட்கும் இப் பெரிய தொண்டில் பங்குவேண்டும் என்று விரும்பினார்கள். ஆகவே, வாயிற்புறத்தில் அமைத்துள்ள சிறிய கோயில்களில் வடபுறம், இருப்பவற்றில் மூன்றாவது கோயில் பட்டத்தரசி ரங்கபதாகை பெயரிலும், ஐந்தாவது கோயிலை அழகில் ஈடு இணையற்ற இளைய மகாராணி பெயரிலும் அமைத்துள்ளேன். இராஜ : மிகவும் சரி. அப்படியானால் மற்றக் கோயில்கள் யார் பெயரில் உள்ளன. சிற் : இன்னும் ஒன்றும் முடிவு செய்யவில்லை; அரசரின் ஆணையின் வண்ணம் செய்யச் சித்தமாக இருக்கிறேன். இராஜ : கற்கோயிலை அமைக்கும் வழக்கத்திற்கு ஆதி கர்த்தாவான என் மூதாதையார் மகேந்திரவர்மர் பெயரில் முதற் கோயில் வழங்கட்டும். அவருடைய பல்வேறு பட்டப் பெயர்களுள் ஒன்றான நித்ய வினோதன்' என்ற பெயரைச் சேர்த்து "நித்யவினோதேஸ்வரம்' என்று முதற்கோயில் அமையட்டும்.