பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 Ö சிற் கயிலாசநாதர் கோயில் சக்கரவர்த்தியின் திருவுள்ளப்படியே ஆகட்டும். உள்ளே திருச்சுற்று முழுவதிலும் 58 சிறிய கோயில் கள் அமைந்துள்ளன. வாயிலின் நேர் பின்புறம் மேற்குமுக வாயில் ஒன்று அமைத்துள்ளேன். இந்த இராஜ இரண்டு வாயில்கள் நீங்க, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குச் சுற்றுச் சுவர்கள் நான்கிலும் 58 சிறிய கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சிவ பெருமானின் பல்வேறு படிவங்கள் அமைந்துள்ளன. : சிற்பியாரே. சுற்றுக் கோயில்கள், ஒவ்வொன்றும் ஒரு கோயில்போல் முழுத் தன்மையுடன் விளங்குமாறு அமைத்தது சிறப்புடையது. ஒவ்வொரு சிறிய கோயிலையும் ஒரு விமானமாக அமைத்தது இதுவரை யாரும் செய்யாத புதுமை, ஆமாம். அன்று சிற் : இராஜ சிற் : இராஜ சிற் : கோயில் அமைப்பு முறையைப் பற்றி என்னிடம் ஆராயும்பொழுது, திருச்சுற்றில் செய்துள்ள இச் சிறு கோயில்கள்பற்றி நீர் ஒன்றும் கூறவில்லையே. ஆம் அரசே. அன்று யான் இதுபற்றி ஒன்றுங்கூறாத காரணம், நானே இதனை நினைக்காதது தான்.

பின்னர் எப்பொழுது இந்த ശ്രു வந்தீர்? இந்தக் கற்பனையின் பெருமை இளவரசர் மகேந்திர வர்மருக்கே உரியது. அவர்தாம் இவ்வாறு திருச்சுற்று முழுவதும் சிறிய கோயில்கள் அமைக்குமாறு கட்டளை இட்டார். -

அப்படியா. மிகவும் நல்லது. வாயிற்புறத்தில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன் விட்டீர்? இந்தக் கோயிலுக்கு ஏற்ற கோபுரம் அமைக்க இவ்வளவு பெரிய இடைவெளி வேண்டுமா? அதுவும் இளவரசர் மகேந்திரவர்மரின் ஆணையின் படியே விடப்பட்டுள்ளது. அங்கே அவர் தம்