பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கயிலாசநாதர் கோயில் இராஜ ஐயனே! நான் எழுப்பிய கோயிலுக்கு நாளை தான் - கும்பாபிஷேகம். அதுபற்றி என்ன? குரல் : இராஜசிம்மா! திருநின்றவூரில் பூசலார் என்ற ஒருவர் வாழ்கின்றார். நீண்டகாலம் முயன்று எனக்கு ஒரு கோயில் கட்டி இருக்கின்றார். நாளைதான் அதற்கும் கும்பாபிஷேகமாம். எனவே, நீ விரும்பிக் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகத்தை மாற்றி வைத்துக் கொண்டால் நலமாக இருக்கும். இராஜ : (விழித்துக்கொண்டு பெருமானே! ஈதென்ன புதுமை? நானும் அசரீரி கேட்கக்கூடிய பெரும் பேறு பெற்றுவிட்டேனா? இறைவா! நீயே விரும்பி ஓர் அன்பர் கட்டிய கோயிலில் நாளை குடிபுகுவ தானால் அந்தக் கோயிலை நான் சென்று முதலிற் காண வேண்டாவா? - - (அரசன் படைகளுடன் திருநின்றவூர் வந்துள்ளான்) - . . * இராஜ : ஐயா! இதுதானே திருநின்றவூர்? இங்கே பூசலார் என்பவர் கோயில் கட்டி இருக்கின்றாராமே? எங்கே - அந்தக் கோயில்: குரல் : அரசே! திருநின்றவூர் இதுதான். ஆனால், இங்கே கோயில் ஒன்றும் யாரும் கட்டவில்லையே! அதோ அந்த மரத்தின் அடியில் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஆள்தான் பூசலார். இதோ அழைத்து இராஜ : வேண்டா வேண்டா: இதோ. நானே சென்று அவரைக் கண்டு வணங்கி வருகின்றேன். (சிறு தாமதம் - சுவாமி! வணங்குகிறேன்! நான்தான் இராஜசிம்மன்.