பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 79 பூசலார் : அரசர்போலத் தெரிகின்றதே! வணக்கம். இந்த ஆண்டியிடம் அரசர் எதனை வேண்டி வந்துள்ளார்? இராஜ : பெருமானே! தாங்களா ஆண்டி? முழுமுதற் பரம்பொருளான சிவபெருமான் அரசனாகிய அடியேன் கட்டிய கோயிலில் வரமறுத்துத் தாங்கள் கட்டிய கோயிலில் நாளையே குடிபுகுவதாகக் கூறினாரே! அக்கோயில் எங்கே உள்ளது? அதனைக் காண ஆவலுடன் வந்துள்ளேன். பூசலார் : இறைவனே கூறினானா? நான் கோயில் கட்டியுள்ளதாகவா இறைவன் கூறினான்? என்ன புதுமை! இறைவனுடைய கருணை இருந்தவாறு என்னே! இராஜ : ஆம் ஸ்வாமி! கயிலையில் வாழ்கின்ற கருணாகரன் காஞ்சியில் வந்து மகிழ்வோடு உறைய வேண்டும் என்ற எண்ணத்தால் அக் கயிலை மலையைப் போலவே குன்றம் அன்னதோர் கோயில் எடுப்பித்தேன். இன்று அப்பெருங்கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்வதாகவும் ஏற்பாடு செய்திருந் தேன். ஆனால். பூசலார் : அப்படியா! அதற்குள் என்ன இடையூறு நேர்ந்து விட்டது. இராஜ : இறைவன் அடியார்க்கு இடையூறு என்ன வரமுடியும்! ஒன்றுமில்லை. ஆனால், அசரீரியாக இறைவன் தோன்றித் தாங்கள் கட்டிய கோயிலில் இன்று குடிபுகப் போவதாகவும், எனவே நான் கும்பாபிஷேகம் செய்வதற்கு வேறு ஒருநாளை அமைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறிவிட்டார்.