பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கயிலாசநாதர் கோயில் விட்டால் என் பெயரும் நிலைத்திருக்கும்படியான செயல் ஒன்றைச் செய்ய விரும்புகின்றேன். இராஜ : சுத்த வீரனான நீ இப்படிப் பேசுவது ஏன் என்றே தெரியவில்லை. எவ்வாறாயினும், உன் விருப்பம் என்ன என்பதைத் தெரிவிக்கலாமே. மகேந் : உலகம் உள்ளளவும் புகழ்பெற்று விளங்கக் கூடியதும், ராஜசிம்மேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றதுமான கைலாசநாதர் கோயிலைத் தாங்கள் கட்டினர்கள். அப் பெருங்கோயிலின் வாசலில் நானும் ஒரு கோயிலைக் கட்ட விரும்புகிறேன். தலைமைச் சிற்பி லலிதாலயருக்கு உத்தரவு கொடுக்குமாறு வேண்டுகிறேன். இராஜ : என்ன லலிதாலயரே! இளவரசர் சொல்வதைப் போல் செய்வதற்கு ஏதேனும் தடையுண்டா? லலி : தடை ஒன்றுமில்லை. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ஒரு கோபுரம்போலக் காட்சி அளிக்கக் கூடிய முறையில் இளவரசர் பெயரால் மகேந்திரவர் மேசுரம் என்ற கோயிலைக் கட்டிவிடலாம். + 费 資料 அறிவிப்பாளர் : இளவரசன் மகேந்திரவர்மன் பெயரால் எழுப்பப்பெற்ற இக் கற்கோயில் கயிலாச நாதர் கோயிலின் வாயிலில் கம்பீரமாக நிற்கின்றது. இக் கோயிலைக் கட்டிய மகேந்திரவர்மன், தந்தையாகிய இராஜசிம்மன் காலத்திலேயே போருக்குச் சென்று வீர ஸ்வர்க்கம் எய்தினான் என்று அறிகின்றோம். இத் துயரச்செய்தி நந்திவர்மப் பல்லவமல்லன் காஞ்சியில் எழுப்பிய வைகுந்தப் பெருமாள் கோயிலிலிருந்து அறியப்படுகிறது. நந்திவர்மன், பரமேஸ்வர விண்ணகரம் என்ற பெயருடன் எழுப்பிய கோயிலின்