பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 85 ஸைலே கைலாஸ் லீலாம் அபஹரதிக்ருஹே ராஜஸிம்ஹேஸ் வராக்யாம் பிப்ரதி அப்ரம் லிஹாக்ரே விரசயது ஸ்தா ஸந்நிதானம் வ்ருஷாங்க! 鸞 饿 窦 யுத்தத்தில் வெற்றி பெறுபவனும், நாட்டிற்கு நன்மையைச் செய்பவனும், ஒப்பற்ற வில்லாளனும், சிறந்த வெற்றி வீரனும், சிவலிங்கத்தைத் தலையில் அணிந்தவனும் ஆகிய இராஜசிம்மன். இப்பூமியை நீண்டகாலம் காப்பாற்றுவானாக. ராஜஸிம்மோ ரணஜய: பூநீபர: சித்ர கார்முக: ஏகவீர சிரம்பாது சிவகுடாமணி: மஹீம் மகேந்திரன் : அப்பா! சாளுக்கியர்கள் மறுபடியும் பல்லவ நாட்டின்மீது, போர்தொடுக்கப் பிரயத்தனம் செய்வதாகத் தெரிகிறது. இந்தப் போருக்குச் சக்கரவர்த்தியாகிய தாங்கள் செல்வது அவ்வளவு பொருத்தமாக எனக்குப் படவில்லை. ஆகவே, நானே சென்று பகைவர்களை முறியடித்து வருகின்றேன். இராஜ : மகேந்திரா! நம்முடைய மூதாதையருள் மிகப் பிரசித்திபெற்றவராகிய மகேந்திரவர்மரின் பெயரை நீ பெற்றுள்ளாய். ஆகவே, நீயே சாளுக்கியர்களுடன் போர்புரியத் தகுதிவாய்ந்தவன். உன் விருப்பம் போலவே செய்யலாம். மகேந் : தந்தையே! சாளுக்கியர்களுடன் நான் செய்யப் போகும் இந்தப் போர் எங்ங்னம் முடியுமோ என்று சொல்வதற்கில்லை. ஆகவே, நான் திரும்பிவரா