பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

காமத்துப்பால் களவியல் தகையணங்குறுத்தல் 4. உயிர் உண்ணும் தோற்றம் (தெளிவுரை) பெண் தன்மையுடைய இப்பேதைக்குக் கண்கள், கண்ணுக்குரிய கண்ணோட்டம் இன்றி, எதிர் மாறாக, பார்த்தவரது உயிரைத் தொலைக்கும் பார்வை யுடையனவாய் உள்ளன. '"கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண் பெண் (பதவுரை) பெண் தகை = (உருவத்தால்) தன்மை பெற்றுள்ள, பேதைக்கு = இந்தப் பேதைப் பெண்ணுக்கு, கண் - கண்களானவை, கண்டார் = பார்த்தவரது, உயிர் உண்ணும் தோற்றத்தால் = உயிரைத் தொலைக்கும் பார்வையைப் பெற்றிருப்பதால், அமர்த்தன = (கண்ணுக்கு இருக்க வேண்டிய தன்மையின்றி) எதிர்மாறாய் உள்ளன. (தோற்றம் - பார்வை; பெண்டகை - பெண் தகை = பெண்தன்மை; பேதை = அறியாத இளம்பேதைப் பெண்; அமர்த்தல் -மாறுபடுதல்,அமர்த்தன - மாறுபாடாயுள்ளன.) (மணக்குடவர் உரை) தம்மைக் கண்டவர்கள் உயிரை யுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக் கொத்தன கண்கள். (பரிமேலழகர் உரை } பெண்டகையை யுடைய விப்பேதைக்கு உளவாய கண்கள், தம்மைக்கண்டா ருயிருண்ணுந் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.