பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பொருட்பால் இந்தச் சிரும் சிறப்பும்-பேரும் பெருமிதமும் யார்க் குக்கிடைக்கும்? ஈவார்மேல் நிற்கும் புகழ்' என வள்ளு ഖf് ஓரிடத்தில் கூறியுள்ளபடி இன் சொலால் ஈத்தளிக்க வல்லாரே இந்தப் பெருமிதக் குறிப்புணர்தலுக்கு இலக் கியமாவர். இதைத்தான் தான் கண்டனத்து' என்னும் தொடர் உணர்த்தி நிற்கிறது யான்கண்டனையர் என் இளையரும்' என்னும் பிசிராங்தையாரின் புறநானூற்றுப் பகுதியையும் நோக்குக. தான் கண்டனத்து' என்பதற்கு, தான் கருதுகிற படி மக்கள் கடப்பர் என்று பொருள் பண்ணினேம். இன்னும், தான் கண்குறிப்புக் காட்டுகிறபடி நடப்பர் என்றும் கூறலாம், மற்றும், தான் எல்லா இடங் களுக்கும் சென்று நேரில் பார் ைவ யி ட் டா ல் எப்படி யிருக்குமோ, அப்படியே தான் ஒரே இடத்தில் இருக்கும்போதும் எல்லாம் ஒழுங்காய் இயங்கும் என்றும் உரைக்கலாம். மேலும், காணுதல் என்பதற்குச் செய்தல் என்ற பொருளும் உண்மையின், தனக்கு எப்படி எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி அப்படி எல்லாம் புதிதாய் ஓர் உலகத்தைச் செய்து அமைத்துக் கொண்டதுபோல் இவ்வுலகம் இருக்கும் என்றும் உரை கூறலாம். செய்து வைத்தாற்போல இருக்கிறது என்று உலகவழக்கில் கூடச் சொல்லுகிருேம் அல்லவா? இன்னும் இப்படி எத்தனை நயங்கள் ! எத்தனே கற்பனைகள்! அம்மம்மா! ດົກ 3. Gລເລດ໌ແ໑ : தெவிட்டாத திருக்குறள்-7 மாதம் இரு தொடர் உரை நூல் ஆறுமாதக் கட்டணம் அஞ்சல் செலவுடன் ரூ. 2-25