பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல்-இல்வாழ்க்கை 7. முயல்வாருள் எல்லாம் தலை ' இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலே " (பதவுரை) இயல்பின்ை இயல்பான ஒழுக்க முறை யுடன், இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் = குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று புகழ்ந்து பேசப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை=(வேறு நன்மை பெற முயல்ப வாகளுககுள எலலாம முதனமையானவன ஆவான. (இயல்பின்ை என்பதின் இறுதியிலுள்ள ஆன் மூன்ரும் வேற்றுமை உருபு) (மணக்குட வர் உரை) நெறியினனே யில் வாழ்க்கை வாழ்பவ. னென் பான், முயல்வா ரெல்லாரினுத் தலையாவான். முயறல்பொருட்கு முயறல் . பரிமேலழகர் உரை) இல் வாழ்க்கையினின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான், புலன்களே விட முயல்வா ரெல்லாருள் ளும் மிக்க வன். (விளக்கவுரை) இக்குறளில் உள்ள இல்வாழ்க்கை வாழ்பவன்' என்னும் தொடர் ஒர் அரிய அணுத்தொடர் ஆகும். இத்தொடரில் இரண்டு முறை வாழ்(தல்) என்னும் சொல் வந்துள்ளது. இதற்கு வள்ளுவர் அகராதியில் என்ன பொருள்? கணவனும் மனைவியுமாய் இல்லில் இயைந்து வாழ்தலையே வாழ்தல் என வள்ளுவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இல்வாழ்க்கையே வாழ்க்கையாக அவர்க்குப் புலப்பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கையெல்லாம், "வாழாது வாழ்கின்றேன்' என ஒரு காரணம் பற்றி ஒரிடத்தில் மணி வாசகர் கூறியிருப்பது போல, வாழாத வாழ்க்கையே போலும் வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் என்னும்