பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அறத்துப்பால் பகுதியில், மனைவியை வாழ்க்கைத்துணை எனக் கூறுகிறர். அங்ங்னமெனில், வாழ்க்கை என்பது எது? என நாமே உய்த்துணர்ந்து கொள்ளலாமே. இல்வாழ்க்கையே வாழும் வாழ்க்கை என்னும் கருத்தை உள்ளடக்கியே இல்வாழ்க்கை வாழ்பவன்' என இக்குறளில் ஆசிரியர் கூறினர். (வாழ்க்கையை வாழ்தல் - அதாவது வாழும் வாழ்க்கை). இத்தொடரில் இன்னும் ஒரு நயங் காணலாம். ‘எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிருர்’ என்பது போல, இல்வாழ்க்கையில் உள்ள எல்லோருமே வாழ்ந்தவ ாாகி விடுவார்களா? இல்லறமென்னும் நல்லறத்தைப் புல்லறமாக்கிக் கொண்டவர்கள் எத்துணையோ பேர்! 'கலியாணம் பண்ணியும் பிரமச்சாரி' என்றபடி, பேருக்குத் திருமணம் செய்துகொண்டு பேதுறுகின்ற பேதைப் பித் தர்கள் எத்துணையோ பேர்! இவர்களெல்லாம் இல்வாழ்க்கை வாழ்பவராக மாட்டார்கள். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பின்படி வாழ்பவரே வாழ்வாராவார் என்ற கருத்தை யும் அடியொற்றித்தான் இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ் பவன்' என்ருர் வள்ளுவப் பெருமானர். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பு ' என்பது என்ன? இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல் பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்ருே? எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற் கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப் படுகின்றதல்லவா? இது கூடாது. செயற்கையான போலித் தனமின்றி, இயல்பான ஒழுங்குமுறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட்கருத்து. இக்குறளில் உள்ள முயல்வார் என்பதற்கு, உலகியல்பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில்