பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ பொருட்பால் என்பது குறட் கருத்து. அங்ங்னமெனில், இதிலுள்ள மறை பொருள் (இரகசியம்) யாது? "பணம் பத்தும் செய்யும்', 'பணம் பாதாளம் வரை யும் பாயும், பணக்காரனேச் சுற்றிப் பத்துப்பேர் என்றும் இருப்பர் என்னும் பழமொழிகள் அறிவிப்பது என்ன? பணம் படைத்த பலர், பணத்தை எலும்புத் துண்டாகப் போட்டு, பாமரர் முதல் படித்தவர்வரை பணியவைத்து, நீர் சொட்ட நாக்கைத் தொங்கவிட்டு வால் குழைக்கச் செய்கின்றனர், என்பதுதானே இப்பழ மொழிகளின் உட்கிடை? இந்தப் பணக்காரர்கள் காலால் இட்ட வேலையை அந்த நாய்கள் தலையால் செய்வதெல்லாம் பணம் கொடுக்கும் வரையில்தான். பாராட்டுவது எல்லாம் எதிரில் மட்டுந்தான். இதற்குக் காரணம் என்ன? பணம் கொடுப்பவர்கள் வாங்குபவரின் நன்மைக்காகக் கொடுப்ப தில்லை; தங்கள் நன்மைக்காகவே கொடுக்கிரு.ர்கள். ஆனல், இந்தக் குறளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னனிடத்தில் மக்களுக்கிருக்கும் ஈடுபாடு, மகாகனம் பணமூட்டைக்கும் உயர்திருவாளர் எலும்புத் துண்டுக்கும் இடையே உள்ள ஈடுபாடுபோன்ற தன்று. பின் என்ன? பெற்ருேர்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஈடுபாடாகும் அது பெற்ருேர்பிள்ளை என்ற பிறகு, விளக்கம் வேறு வேண்டியதில்லை. மன்னனும் மக்களும் அப்படித்தானே? . ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் ஊன்றி நோக்க வேண்டும். இன்சொலால் அளித்தல் - ஈத்து அளித்தல்-இன்சொலால் ஈதல் - இன்சொலால் ஈத்து அளித்தல்-இவ்வாறெல்லாம் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க, இந்த உயர்நிலை எல்லோர்க்கும் இயலுமா? அதல்ைதான் வல்லாற்கு", (வல்லவனுக்கு) என்ருர். இனி அடுத்த தொடருக்குச் செல்வாம்: தன் சொலால் தான் கண்டனத்து இவ்வுலகு என் பதில், உலகு என்பதற்கு முன்னுள்ள இ (இ + உலகு = இவ்வுலகு = இந்த உலகம்) என்னும் சுட்டு, வள்ளுவர் கம் பக்கத்தில் இருந்து கொண்டு இந்த இருபதாம் நூற்ருண் டைச் சுட்டிக்காட்டுவது போல் காணப்படுகின்றது. அதாவது, இந்த உலகம்-ஒருவரையொருவர் மதிக்காமல், ஒருவர்க்கொருவர் கட்டுப்படாமல், ஒருவரோடொருவர்