பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் - இறைமாட்சி 8. தான் கண்டனத்து (தெளிவுரை) இன்சொல்லுடன் உதவியும் செய்து மக்களைக் காக்கும் மன்னன் சொன்னல் சொன்னபடி, நினைத்தால் கினைத்தபடி இவ்வுலகம் ஆடும். '. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு ' ( பதவுரை ) இன்சொலால் = இன் சொல்லுடன், ஈத்து= ஈதலேயும் செய்து, அளிக்க வல்லாற்கு = மக்களைக் காக்கவல்ல மன்னனுக்கு, இவ்வுலகு = இந்த உலகமானது, தன் சொலால் = தான் சொல்லுகிற சொல்லின்படியும், தான் கண்டனைத்து= தான் கருதுகிறபடியும் இயங்கும். (அளித்தல் = அருளுடன் காத்தல்; காணுதல் = கருதுதல்; அனைத்து=போன்றது; தான் கண்டனத்து=தான் கருது வது போலவே கடக்கும்.) - ( மணக்குடவர் உரை ) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்யவல்ல அரசனுக்குத் தன்னேவ லாலே இவ்வுலகம் தான் கண்டாற்போலும் தன் வசத்தே கிடக்கும். (பரிமேலழகர் உரை) இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகங் தன் புகழோடு மேவித் தான் கருதிய வளவிற்ரும். (விளக்கவுரை) இந்தக் குறளில் வேங்தனுக்கு மூன்று நிலைகள் பேசப்பட்டுள்ளன. இன்சொல், ஈதல், அளித்தல் என்பன அவை. இம் மூன்றும் ஒருங்கு அமையப்பெற்ற அரசன் சொல்படியே, நினைத்தபடியே மக்கள் கடப்பர்