பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காமத்துப்பால் 8. படாஅ முலைமேல் துகில் (தெளிவுரை) இந்தப் பெண்ணின் சாயாத கொங்கை களின் மேல் அணியப்பட்டுள்ள ஆடையானது, மதம் பிடித்த யானேயின் மத்தகப்பகுதியில் அணிந்துள்ள கட் படாம் போன்றுள்ளது. ' கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேற் றுகில் ' (பதவுரை) மாதர் = இந்தப் பெண்ணுடைய, படாஅ முலைமேல் துகில்= சாயாத கொங்கைகளின்மேல் அணிக் துள்ள (மாராப்புத்) துணியானது, கடாஅ = மதமுடைய, களிற்றின்மேல் = ஆண் யானையின் மேல் அணிந்துள்ள, கட்படாம் = கட்படாம் போன்றுள்ளது. (மணக்குடவருரை) மதயான முகத்துக் கண்மறை வாக இட்ட படாம்போலும், மாதரே, கினது படாமுலே மேல் இட்ட துகில். (பரிமேலழகருரை) இம்மாதர் படாமுலேகளின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தலின், கொல்வ தாயமதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை யொக்கும். (விளக்கவுரை) கடாம் = மதம், களிறு = ஆண்யானே; கட்படாம் = யானே முகத்தில் - கண்பகுதியில் அணி யும் உடை, படுதல் = சாய்தல்-படா - சாயாத = தளராத; துகில்=மெல்லிய பருத்தியாடை, கடாஅ, படாஅ என்னும் உயிர் அளபெடைகள், யானையின் மதத்தின் மிகுதியையும் கொங்கையின் தளராத உறுதியையும் உணர்த்துகின்றன. ஒர் அழகிய பெண்ணின் உருவத்தை வரையும் ஓவியப் புலவன், கொங்கைகளுக்கு என்ன தோற்றம் கொடுக் கிருனே, அதே தோற்றத்தைத்தான் புலவர்கள் இலக் கியங்களில் சொற்களால் புனைகின்றனர். எனவே, இது போன்ற இலக்கியப் பகுதிகளே ஒவியக் கலைக்கண்கொண்டு கற்றலே நன்று காமக்கண்கொண்டு கற்கவேண்டா! இதனை இதோடு நிறுத்திக்கொள்வோம்,