பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 129

தும்மல் ஏற்படுகிறபோது, காற்று இழுக்கும் சுவாசத்தின் வேகம், ஒரு விரைவோட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சாதனையைவிட, 4 மடங்கு அதிக வேகம் என்றும், தும்மலின் வேகம் (sneez Speed) மணிக்கு 103.6 மைல் வேகம் என்றும் கண்டறிந்திருக்கின்றார்கள்.

தும்மலின் போதும், இருமலின் போதும் மட்டுமா சுவாசக் காற்றின் வேகம் அதிகரிக்கிறது? பெருமூச்சு விடுகிறபோதும் தான்!

சிரிக்கின்ற சமயத்தில் இவ்வாறு சுவாசத்தின் வேகம் அதிகரிப்பதால் தான், சிரிப்பு தேகத்திற்கு நல்லது என்று எல்லோரும் சிபாரிசு செய்கின்றார்கள். -

உடற்பயிற்சியால் உண்டாகும் நன்மைகள்

1. தொடர்ந்து செய்து கொண்டு வருகிற உடற்பயிற்சி களால், நுரையீரல்கள் நிறைய பிராணவாயுவை, விரைவாகப் பெற்றுக் கொள்ளும் வலிமையையும் சக்தியையும் பெறுகின்றன.

இதனால், இரத்த ஓட்டத்தில் நிறைய பிராணவாயு நிறைந்து கொள்ளும், நேர்த்தியும் செழிப்பும் பெருகிக் கொள்கிறது. - -

2. உடற்பயிற்சிகளால், மார்புக்கூடு அதிக அளவில் விரிவடைந்து கொள்வதால், அதிக சுவாசம் குறைந்த நேரத்தில் ஏற்பட்டுவிடுகிறது.

நுரையீரல்களுக்குள் காற்று அதிக நேரம் தங்குவதால், பொது இரத்த ஓட்டத்தில் பிராண வாயுவை நிறைய பெற்றுக் கொள்ளவும், கார்பன்டை ஆக்சைடை