பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 199

தண்டுவடத்தில் வெள்ளை, மற்றும் சாம்பல் பொருள் காணப்படுகிறது. சாம்பல்பொருள்தண்டுவடத்தின் மத்தியில் காணப்படுகிறது. வெள்ளைப் பொருள் வெளிப்புறத்தில் காணப்படுகிறது.

தண்டுவடமானது, ஒரு நீண்ட உருளையைப் போலிருக்கிறது. அதன் கடைசிப் பகுதியோ, குதிரை வாலைப் போன்றிருக்கிறது. - -

இயக்கம்: 31 ஜோடி முதுகுத்தண்டு நரம்புகள், தண்டுவடத்திலிருந்து கிளம்பி, தேகத்திலுள்ள தசைகள் மற்றும் தோல் முதலிய எல்லா உறுப்புகளுக்கும். செல்கின்றன. -

இந்த நரம்புகள், தண்டுவடத்திலிருந்து வெளி வந்த பிறகு, சிற் சில இடங்களில் ஒன்றோடொன்று பின்னிக் கொள்கின்றன. இந்தப் பின்னல் நிலையே வலை என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக கழுத்து வலை, இடுப்பு வலை என்று அழைக்கப்படுவதைக் காணவும்.

ஒவ்வொரு முதுகுத்தண்டு நரம்பிற்கும், இரண்டு வேர்கள் உள்ளன.

1. செய்கைவேர் (Motor Root): முன்புறம் இருக்கும் இந்த செய்கைவேர்கள் வழியாக, மூளையின் உத்தரவுகள் மற்ற உறுப்புகளுக்கும் தசைப் பகுதிகளுக்கும் செல்கின்றன. 2.உணர்ச்சிவேர்(Sensory Nerve): பின்புறம் இருக்கிற உணர்ச்சி வேரின் வழியாக, உடலின் பல உறுப்புக்களில் இருந்தும் செய்திகள், மூளையை நோக்கிச் செல்கின்றன.

குறிப்பு: தேகத்தின் இடப்புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் வலது பக்கத்திற்குச் செல்கின்றன.

தேகத்தின் வலது புறத்திலிருந்து செல்லும் செய்திகள், மூளையின் இடது பக்கத்தை அடைகின்றன. -