பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

(ஆ) தொடு உணர்ச்சி நரம்புகள் (Tactile Corpuscles)

தோலின் அடிப்பாகத்தில் அநேக நரம்பு முடிச்சுகள் காணப்படுகின்றன. இவைகளுக்குத் தான், தொடு உணர்ச்சி நரம்புகள் என்று பெயர்.

(இ) 6e6o4’avov zoco (sebaceous gland)

உள்ளங்கை, உட்பாதங்கள் தவிர, தேகமெங்கும் காணப்படுகின்றவை செபேசியஸ் சுரப்பிகளாகும்.

இவை தோலின் உரோமம் ஆரம்பமாகும் இடத்தில் அமைந்துள்ள சுரப்பிகளாகும்.

இந்த சுரப்பி சுரக்கின்ற எண்ணெய்க்குப் பெயர்சீபம் (Sebum) என்பதாகும்.

இந்த சீபமானது, உரோமம் வளர்வதற்கு உதவுகிறது. தேகத்தை பளபளப்பாய் வைத்திருக்கவும் செய்கிறது. எபிதீலியத்தால் ஆன இந்தச் சுரப்பியின் சீபம், வயதான காலங்களில் சுரப்பதில் குறைந்து போவதால் தான், வயதானவர்களின் தோலும், உரோமமும் உலர்ந்து போய்க் காணப்படுகிறது. -

தோலின்துணைஉறுப்புக்களாக உரோமமும் நகங்களும் விளங்குகின்றன.

தோலும் தேகத்தின் வெப்ப நிலையும்

மனிதனது தேகத்தில், எப்பொழுதும் 98.4 F வெப்பம் இருக்க வேண்டும். இந்த வெப்பம் எந்த நேரத்திலும், எந்தக் காலத்திலும் சீராக இருந்து கொண்டே இருக்க வேண்டும்.