பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 223

தேகம் அதிக வெப்பமடைந்து போனால், காய்ச்சல் உண்டாகி விடுவதும், வெப்பம் குறைந்து போனால், ஜன்னி ஏற்பட்டுவிடுவதும் நீங்கள் எல்லாம் அறிந்த உண்மைதானே!

எப்படி ஒரே சீராக, உஷ்ண நிலையை தேகம் காத்துக்

கொள்ள முடிகிறது? இதுதான் இயற்கையான தேக அமைப்பில், சிறப்பாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

உடலில் உள்ள தசைகள், உழைப்பில் ஈடுபடுகிறபோது, உடலில் வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பம் உடலை விட்டு வெளியேறாமல் உள்ளே இருந்து விடுமானால், வெப்பநிலை உயர்ந்து, உடல் நிலை வீணாகிவிடும்.

அதிகமாகிவிட்ட உடல் வெப்பத்தை வெளியே அகற்றி விடவேண்டும். அந்த வேலையைத்தான், கழிவு மண்டலம் அற்புதமாகச் செய்து முடிக்கிறது.

உடலில் ஏற் பட்ட அதிக வெப்பம், வெளிமூச்சு மூலமாக; சிறுநீர் மூலமாக, வியர்வை மூலமாக வெளியேற்றப்படுகிறது. இவையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயங்கி, உடலின் வெப்பத்தைச் சீராக்கி விடுகின்றன.

நமது தேகத்தில் உஷணநிலை அதிகரித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

கோடை காலமாக இருந்தால், சுற்றுப்புற சூழ்நிலையும் அதிக உஷ்ணமாக இருக்கும் போது, நமது உடலிலிருந்து வெளியேற்றும் வெப்பநிலை சற்றுக் குறைவாகவே இருக்கும். .

அப்பொழுது ஏற்படுகிற'நிலையைத்தான் புழுக்கம் என்கிறோம். -

உடலில் புழுக்கம் அதிகமாகும் போது, தோலின் அடியில் உள்ள இரத்தத் தந்துகிகள், அதிக இரத்தத்தை அங்கே