பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 டாக்டர். எஸ்.நவராஜ் செல்லையா

ஒரு குறிப்பை இங்கே நாம் தெரிந்து கொள்வ அவசியம். -

விழிக்கோளத்திற்கு (Eye ball) எப்படி வேண்டு மானாலும், எந்தத் திசைப்புறம் திரும்ப வேண்டுமானாலும், முடிந்த வரை இயங்குகிற சுதந்திரச் சூழ்நிலை அமைந்திருக்கிறது.

35 டிகிரி மேற்புறமாக (Up); 50 டிகிரி கீழ்ப்புறமாக (Down); 45 டிகிரி வெளிப்புறமாக (out); 50 டிகிரி மூக்கை நோக்கித் திரும்பிப் பார்க்க, விழிக்கோளத்தால் முடிகிறது என்பதே, அதன் இயக்கத்திற்கு இருக்கும் பெருமை புரிகிறது. கிட்டப்பார்வையும் துரப்பார்வையும்

- கம்புகளும், கூம்புகளும், விழித்திரையில் உள்ள ஒளியை உணர்கின்ற அம்சங்களாக விளங்கின்றன.

இரவு மற்றும் பகலில் தெரியும் பார்வைக்குக் கூம்புகளே (Cones) பொறுப்பேற்கின்றன.

இரவு மற்றும் அந்திநேரப் பார்வைக்குக்கம்புகள்(Rods) பொறுப்பாக இருக்கின்றன.

கம்புகளில், பார்வை ஊதா எனப்படும் சிறப்புப் பொருட்கள் இருக்கின்றன. அந்தப் பார்வை ஊதாவில் ஏற்படும் ஒளி ஊடுருவக் கோளாறால்தான், மாலைக்கண் G5IT (Nyctalopia) o_girl_mpg.

இனி, பார்வையில் ஏற்படுகிற ஊனத்தையும் புரிந்து கொள்வோம்.

மனிதர்களின் கண்கள், பல்வேறு தூரங்களிலுள்ள பொருட்களைப் பார்த்து மகிழ்கின்றன. கண்களின் லென்சு களுக்கு, நெகிழ்வுத்தன்மைகள் நிறைய இருப்பதால்தான், நிறைவாகப் பார்க்க முடிகிறது. -