பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சாதாரணக் கண் விழியை விட, இது சற்றுக் குட்டையாக இருப்பதால் தான், இந்தக் குறை ஏற்படுகிறது.

இந்தக் குறையைத் தீர்த்து சரி செய்ய, இருப்ற குவிலென்ஸ்ை (Biconvex lens) அணிந்து கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு, விழிலென்ஸைக் கட்டிக் காக்கின்ற சிலியாத் தசைகள், தளர்ச்சி ஏற்பட்டு, இயக்கம் ஆற்றலின் நெகிழ்சியை இழந்து போகின்றன.

அப்பொழுது அவர்களுக்கு எட்டப்பார்வை ஏற்படு கின்றது. இதற்கு வெள்ளெழுத்து (Presbyopia) என்று பெயர். அதற்கேற்ற கண்ணாடி அணிந்து, குறையிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். 2 &ng/ (Ear)

காதின் அமைப்பு - -

காது, ஒலிகளைக் கேட்கப் பயன்படுகின்றது. அத்துடன், வெளியுலகில் தேகத்தின் நிலையில் ஏற்படுகிற தூண்டல்களையும், மாற்றங்களையும் காது உணர்கிறது. அதனால் தான், கேட்பதற்கும், சமநிலைக்கும் ஆன சிறப்பு உறுப்பு என்று, காது புகழப்படுகிறது. -

காது மூன்று பாகங்களாகப் பிரிந்து, பணியாற்றுகிறது. 1. Glouchng (Outer ear) 2. BQ3&ng (Middle ear). 3. 2 L &ngs (Inner ear)

/. வெளிக்காது

நாம் கண்ணால் காண்கிற காதின் வெளிப்புறப் பகுதியையே பொதுவாக, காது என்று சொல்கிறோம்.