பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வலைத்திசு இரத்தம் உற்பத்தி செய்யும் உறுப்புக்களின் அடிப்படை அம்சமாகவும், பல உறுப்புக்களின் பகுதியாகவும் வலைத்திசுஅமைந்திருக்கிறது. வலைத் திசுவானது, உயிர்ப்பு மற்றும் தற்காப்புப் பணிகளைச் செய்கின்றது.

3. அடர்த்தியான நார்ப்பொருள் இணைப்புத்திசு

இந்த வகை இணைப்புத் திசுக்கள் தசைநாண் (Tendon) தசை இணைப்புகள், தோல் போன்றவைகளை உருவாக்கி, அடிப்படையான ஆதாரப் பணிகளுக்குக் காரணமாக உள்ளன.

இது மூன்று வகையான அமைப்புகளைக் கொண்டிருக் கிறது. குருத்தெலும்புத்திசு என அமைந்து, அது படிக நிறக் குருத்தெலும்பு, நெகிழ்வுக் குருத் தெலும்பு, இழைக் குருத்தெலும்பு எனப் பிரிந்து நின்று பணியாற்றுகின்றது.

சி. எலும்புத்திசு

எலும் புத் திசுவானது, ஆஸ்டியோசைட் எனப்படும் எலும்பு செல்களாலும், செல் இடைப் பொருள்களாலும் உருவாக்கப்படுகிறது.

எலும் பின் பிரதான அமைப்பு அலகை ஆளப் டியான் என்று அழைக்கப்படுகிறது. இது பல சுற்றுக்களைக் கொண்ட எலும்புத் தகடுகளால் அமைக்கப்பட்டிருக்கிறது.

எலும்பு என்பது மிகவும் வலிமையான இணைப்புத் திசுவாகும். இதில் 50% தண்ணிர் உள்ளது. ,பாகம் கால்சியம், உப்பு, மற்றும் , பாகம் செல்லுலர் பொருட்கள் உள்ளன.

எலும்புச் சோறு (Marrow) என்பது எலும்பில் உள்ள முக்கிய பகுதியாகும். எலும் புச் சோற்றின் எடையைப் பார்த்தால் எலும்பில் தண்ணீர் பகுதி 30% தான் இருக்கிறது.

எலும்பு பற்றிய விவரங்களை எலும்பு மண்டலப்

பகுதியில் விரிவாகக் காணலாம்.