பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘தேகத்தைத் தெரிந்து கொள்வோம்’ என்று எல்லோருமே விரும்புகின்றனர். முயல்கின்றனர்.

ஏற்ற நூல்கள் எதுவும் இல்லாமையால். அவர்கள் ஏமாற்றத்தையே பதிலாகப் பெறுகின்றனர். - இந்தக் குறையைப் போக்கவும்; எளிய முறையில் சுலபமாகவும், தெளிவாகவும் தேகத்தைத் தெரிந்து கொள்ளவும், இந்த நூலை, அரிதின் முயன்று எழுதித் தந்திருக்கிறேன். -

தேகத்தின் அமைப்பு: உறுப்புக்களின் உன்னதப் படைப் பு; அவற்றின் நுணி மையான பொறுப் பு: இவற்றையெல்லாம், படங்களுடன், என்னால் இயன்றவரை விளக்கியுள்ளேன்.

தேகத்தைப் பற்றி தெரிய வைக்க வேண்டும் என்பது மட்டும் என் நோக்கமல்ல. உடற்பயிற்சிகள் செய்கிற போது, உறுப்புக்கள் பெறுகின்ற மலர்ச்சியும், உணர்ச்சியும், எழுச்சியும் நெகிழ்ச்சியும் எப்படியெல்லாம் தேகம் பெறுகிறது என்பதை விளக்கவும், அதனால் மனிதகுலம் பயிற்சிகளில் ஈடுபட்டு, மாண்புமிகு பயன்களைப் பெறவேண்டும் என்பதே என் இலட்சியம். - -

அப்படி ஒரு ஆற்றல்மிகு நிலையை அடைய, அழகுற இந் நூலை அச் சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டர்சுக்கும், ஆர்.ஆடம் சாக்ரட்டீசுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் - -

அன்புடன்

டாக்டர் எஸ். நவராஜ்செல்லையா

முதல் பதிப்பில் ஆசிரியர் எழுதிய முன்னுரையே பிரசுரிக்கப்பட்டுள்ளது. -