பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் . 65

அதனால் தான் (தாமாக) இயங்கு தசைகள் என்ற பெயரைப் பெற்றிருக்கின்றன. ... “

வயிறு, குடல்கள், இருதயம், மற்ற ஜீரண உறுப்புக்கள், போன்ற உள்ஸ்ரீப்புப் பகுதிகள் ஆகியவற்றை, உதாரணமாகக் கூறலாம்.

இத்தசைகளில் வரி எதுவும் இல்லாமல், மழு மழுப்பாக இருப்பதால், வரியற்ற தசை என்றும் கூறுவார்கள். 3. இதயத் தசை

இதயத் தசையும் நம் விருப்பத்திற்கும், நம் இயக்கத்திற்கும் ஆட்படாத ஒர் அதிசயத் தசையாகும்.

இதை நாம் ஆய்வறையில் வைத்து உருப்பெருக்கி மூலம் பார்த்தால், அந்த அதிசய அமைப்பு, பளிச்சென நமக்குப் புலப்படும்.

அமைப்பான தோற்றத்தில் இயக்குத் தசை போலவும், செயல்படுகின்ற விதத்திலே இயங்கு தசைகள் போலவும் இருப்பதே, இதன் சிறப்பம்சமாகும்.

இதயத் தசையிலும் இன்னொரு சிறப்பு-இதில் சிறப்பு அமைப்புக் கொண்ட வரி இருப்பது தான். -

எலும்புத் தசைகள்

தசைகளின் வடிவத்தையும் அமைப்பையும் பொறுத்து,

அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

1. நீளமானவை -

2. குட்டையானவை

3. அகலமானவை.