பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - 77

இரத்த ஓட்ட மண்டலம்

இரத்தம் என்பது வாழ்வுக்கு இன்றியமையாத ஒர் ஒப்பற்ற திரவமாகும். இரத்தத்தை உடலிலுள்ள எல்லா செல்களுக்கும் கொண்டுபோக, சராசரி ஒரு மனிதரின் உடலில் 60,000 மைல்கள் (96,500 கி.மீட்டர்) தூரம் நீளமுள்ள இரத்தக் குழாய்கள் இருக்கின்றன.

இரத்தம் இந்த நீண்ட குழாய்களின் வழியாக, தடையற்ற பயணம் செய்து, ஏறத்தாழ உடலிலுள்ள 60 பில்லியன் எண்ணிக்கைக்கும் மேலுள்ள செல்களுக்கு, உதவுகின்றன; உயிர் வாழச் செய்கின்றன. உதவும் நிலை

ஒவ்வொரு செல்லுக்கும் உடனடித் தேவை உயிர்க் காற்றும் உணவுச்சத்தும். செல்களை செழிக்கச் செய்கின்ற உண்வையும் உயிர்க் காற்றையும் இரத்தம் ஏந்திக் கொண்டு எல்லா செல்களிடமும் போவதால், திசுக்கள் திடமாக வளர்கின்றன. திறமான நிலையில் செல்கள் தங்களைத் தரமாகக் காத்துக்கொள்கின்றன. செயல்பாட்டினால் தேய்ந்து போன செல்களையும் பழுது பார்த்து, பலப்படுத்துகின்றன்.

அத்துடன் நில்லாமல், செயல்பட்ட செல்களில் கூடிக் கிடக்கும் கழிவுப் பொருட்களையும், விரைந்து அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வருகிற வேலைகளையும் இரத்தம் செய்து விடுகிறது.

இரத்தம் உடலிலே ஒரு போக்குவரத்துத் துறையாக மட்டும் பயன்படாமல், பாதுகாப்புத்துறையாகவும் அதாவது போலீசாகவும் இராணுவமாகவும் இருந்து காத்து வருகிறது. அதாவது வெளியிலிருந்து உடலுக்குள்ளே ஊடுருவி நுழைகின்ற நோய்க் கிருமிகளை விரட்டி அடிக்கவும்,