பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 97

(இ) வென்டிரிக்கிள்களும் ஏட்ரியங்களும் ஒய்வு நிலையில் உள்ளதே மூன்றாம் நிலையாகும்.

ஒவ்வொரு முறை இதயம் சுருங்குகிறபோது 60 cc இரத்தம் இறைக்கப்படுகிறது. 1 நிமிடத்தில் ஏறத்தாழ 4 லிட்டர் இரத்தத்தை இதயம் இறைக்கிறது என்றும், கடுமையான பயிற்சி நேரத்தில், இது 20 லிட்டருக்கும் மேலாக இறைக்கப்படுகிறது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

இதயமானது, சராசரி மனிதருக்கு, நிமிடத்திற்கு 75 தடவை சுருங்கி விரிகிறது.

ஒய்வு நேரத்தின் போது 60-80 தடவை இருதயம் சுருங்குகிறது.

பிறந்த குழந்தையின் இருதயம் நிமிடத்திற்கு 140 தடவை என்றும்; வயதானவர்களுக்கு 90 முதல் 95 தடவை சுருங்குகிறது என்றும் கூறுகின்றார்கள்.

இதயத் துடிப்பு

வெண்டிரிக்கிள் சுருக்கத்தின்போது, இருதயம் அளவில் குறைகிறது. அதன் உச்சிபாகமானது விறைத்து, மார்புக் கூட்டின் 5வது விலா இடைப் பகுதியில் மார்பு முன் எலும்பு (ஸ்டெர்னம்) இடது புறமாகத் துடிக்கிறது. இந்த நிகழ்வையே இதயத் துடிப்பு என்கிறோம். -

நாடித் துடிப்பு: (Pulse) ஒவ்வொரு முறை இடது . வென்டிரிக்கிள் சுருங்கும் போதும், இரத்தம் அயோர்ட்டா எனும் மகாதமணி மூலம் வெளியேறுகிறது. மகாதமணியி லிருந்து பிரிகிற இரத்தம் குழாய்கள் மூலம், உடலின் பல - பகுதிகளுக்கும் இரத்தம் செல்கிறபோது, நாடித்துடிப்பை நம்மால் அறிய முடியும்.