பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 421 அதற்கு அண்ணா'அவரைப் பேசச் சொல்லு மாரிசாமி” என்று அண்ணா பதில் கூறிட, வேறு வழியில்லாத மூதறிஞர் ராஜாஜி, அண்ணாவுக்கு முன்பு பேசஎழுந்து 'இன்றுடன்-தி.மு.க. சுதந்திராக் கட்சிக் கூட்டணி தேனிலவு முடிந்தது என்று மனமுறிந்து பேசி, தி.மு.கவுடன் இருந்த அரசியல் நெருக்கத்தை அவரே முறித்துக் கொண்டார் என்பது ராஜாஜி சுதந்திரா கட்சி கூட்டணியின் வரலாறாகும். - அப்படிப்பட்ட ராஜாஜி 1967-ல் காமராஜரை அண்ணாவின் உதவியால் அழித்துவிட்டு, இப்போது அதே காமராஜருடன் தோள் தட்டிக்கொண்டு, கலைஞரை அழிக்கத் திட்டம் தீட்டிய ராஜாஜி, காங்கிரஸ் சுதந்திரா கூட்டணி சார்பாக சென்னைக் கடற்கரையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பெருந்தலைவர் காமராசருக்கு நெற்றியில் ராஜாஜி வெற்றித்திலகம் இட்டு ஆசி கூறித் தனது தேர்தல் பிரசாரத்தை 1971-ல் செய்தார். ஆனால், ராஜாஜி, காமராசருக்கு இட்ட வெற்றித் திலகத்தின் சக்தி என்ன தெரியுமா? தி.மு.க. 234 சட்டசபைத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிட்டது. 184 சட்டசபைத் தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.க. தோழமைக் கட்சிகள் 26 இடங்களிலே வெற்றி பெற்றது. மூதறிஞர் ராஜாஜியின் கையால் வெற்றி திலகம் வைத்துக் கொண்ட பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் பதினைந்தே பதினைந்து சட்டசபைத் தொகுதிகளிலே வெற்றி பெற்றது! கர்மவீரர்காமராசருக்கு வெற்றிப் பொட்டிட்ட மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் சக்தி பெற்றது எத்தனையிடங்களில் வெற்றி தெரியுமா? ஆறே ஆறு இடங்களில் மட்டும்தான். தமிழ்நாட்டிலே உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் 39ல், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை தெரியுமா? 38 இடங்களில் எப்படி மூதறிஞர் ராஜாஜியின் வெற்றித்திலகத்தின் சக்தி? நாகர்கோவில் நாடாளுமன்றம் தொகுதியில், பெருந்தலைவர் காமராஜர் தனது சொந்த பலத்தாலும், காங்கிரஸ் பலத்தாலும் தனிப்பட்டதோர் சக்தியாலே வெற்றி பெற்றாரே தவிர, வெற்றித் திலகத்தின் சக்தியாலன்று! எனவே, அரசியலில் இரண்டு பெரிய கட்சிகளின் சந்தர்ப்பவாத விருப்பு வெறுப்புத்தான், இன்றைய ஜனநாயகம். அது இன்றும் கூட இருக்கிறது என்பது உண்மை யல்லவா? -