பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ பெருந்தலைவருடன் இந்திரா கூட்டணி 1971-ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திண்டுக்கல் நாடாளுமன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கம்பகம் ராஜாங்கம் வெற்றி பெற்றார். அவர் மரணமடைந்து விட்டதால், 1973ஆம் ஆண்டு மே 21-ஆம் நாள் அங்கே இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க.வை விட்டுப் பிரிந்து போன புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். 1972 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி அண்ணா தி.மு.கழகம்' என்ற கட்சி ஆரம்பித்து ஓராண்டே ஆனது. அதற்குள் அது திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தது. திண்டுக்கல் தொகுதி இடைத் தேர்தல் 1973-மே, 21-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததும், அ.தி.மு.க. கட்சிச்சார்பாக மாயத் தேவர் என்பவர் போட்டியிடத் தயாரானார். அந்த நேரத்திலே தமிழ் நாட்டை ஆளும் கட்சி தி.மு.க. எனவே, அந்த இடைத்தேர்தலில், தி.மு.க., பெருந்தலைவர் காமராஜரது ஸ்தாபன காங்கிரஸ், புரட்சி நடிகர் கட்சியான அ.தி.மு.க, மத்திய ஆட்சியை ஆளும் பிரதமரான இந்திரா காந்தியின் இந்திரா காங்கிரஸ், மற்றும் சில சுயேச்சைகளும் போட்டியிட்டன. இந்த இடைத் தேர்தலிலே உள்ள சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கட்சியும் அதனதன் பலமே யானை பலம், திமிங்கல பலம், சிங்க பலம், புலி பலம் என்று நம்பி, அதனதன் சக்தியை மட்டுமே நம்பிப் போட்டியிட்டன. என்ன முடிவு தெரியுமா? அ.தி.மு.க. வேட்பாளர் மாயத் தேவர் 2 லட்சத்து 60 ஆயிரம் ஒட்டுக்களைப் பெற்று வெற்றிபெற்றார். இரண்டாவதாக, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ஒட்டுக்களைப் பெற்று இரண்டாவது இடத்தினைப் பெற்றது. தமிழ்நாட்டினை அன்று ஆளும் கட்சியான தி.மு.க. வெறும் 93